உன் குழந்தைக்கு அவர் மனிதன் என்று அறிமுகம் செய்
தேசத்தின்
சுதந்திர தினத்தை கொண்டாடும் ஆயிரத்தில் ஒருவனாக….
உலகில்
பிறந்த ஒவ்வொரு உயிரினமும் தன் இனத்தால் அறிமுகம் செய்யப்படுகின்றன (உ+ம்- ஆடு, மாடு,
கோழி, பாம்பு, மீன்), ஆறறிவுள்ள மனித இனத்தைத் தவிற. காரணம் அவனுள் புதைந்துள்ள மதம்.
மலர்கள்
மரணிக்கும், தம் மணத்தின் மகிமையைக் காண்பித்துவிட்டு. மிருகங்கள் மரணிக்கும் தன் இனம்
மீதான பற்றைக் காண்பித்துவிட்டு. மரங்கள் மரணிக்கும், மண்ணுடனான தன் இணைப்பைக் காண்பித்துவிட்டு.
ஆனால் மனிதன் மரணிக்கின்றான் தன் மதத்தைக் காண்பித்துவிட்டு. சிலர் மரணிக்கின்றனர்,
தான் ஒரு மத வெறியன் என்பதைக் காண்பித்துவிட்டு.
மதத்தை
காண்பிப்பது தவறென்று கூறுவதில்லை. மாறாக, தான் மனிதன் என்பதை மறந்துவிட்டு, மதத்தை
முன்னிலைப்படுத்துவதையே மடமை என்கிறோம்.
உலகில்
மனிதனைத் தவிர எந்த உயிர்களுக்கு மத்தியிலும் போர் வரவில்லை. வருவதுமில்லை. காரணம்
மனிதன் மட்டுமே மதவெறி பிடித்தவன். மதவெறி கொண்டவன் மிருகத்தை விட மோசமானவன். எனவே,
மனிதனையே அழிக்க முனைகின்றான். முயற்சியின் முடிவே போராக மாறுகின்றது.
நானோ,
நீங்களோ மதத்தால் எம்மை அடையாளப்படுத்துவோம் என்றால், மதம் ஒன்றாலே எமக்கு மரணம் வரும்.
அது மகத்தான மரணமாக இருந்தால் நன்று. மாறாக, மடத்தனமான மரணமாக இருக்கக்கூடாது.
மனிதர்களே….,
ஒரு
நாள் எம்மிடையே ஒரு மோதல் வரும், நிச்சயமாக வரும். அது ஒருவரது அல்லது ஒரு தரப்பின் பிழையால் ஏற்படும்
மோதலாக இருக்கும். ஆனால், மதம் என்ற வெறியினால் ஒரு தரப்பின் குற்றத்தை மறந்து, ஒரு
சமூகவே அதனால் அழிவை சந்திக்கும், உடைமைகள் அழிக்கப்படும், சொத்துக்கள் நொறுக்கப்படும்.
அன்றும் நாம் மத வெறியர்களாகவே இருப்போம்.
எனினும்,
அன்று நாம் மத வெறியின் கோரத்தை அடையாளம் கண்டுகொள்வோம். எனினும், அன்று அழுது பயனிருக்காது.
மதவெறியற்ற
மனிதனாக வாழ்வது எப்படி? நிச்சயம் எம்மால் அவ்வாறு வாழ முடியாது. காரணம் எம்முள் மத வெறி புதைக்கப்பட்டுள்ளது. ஆனால் எமது அடுத்த
வம்சத்தையாவது அவ்வாறு வாழ வைக்க வேண்டும். இல்லையென்றால் ஆங்காங்கே அழிவுகள் வந்துகொண்டே
இருக்கும்.
அதற்காக,
அடுத்த வம்சத்திற்கு மதங்களை விட்டுவிடுங்கள் என்று தீர்ப்பு கொடுப்பதல்ல. ஒரு சில
திருத்தங்களே செய்ய வேண்டும்…
நாம் அவரை எவ்வாறு அறிமுகம்
செய்வோம்?
எங்கள்
குழந்தை அறியும் வயது வரும்போது நாம் ஆரம்பமாக அறிமுகம் செய்வது, அதோ Dog, அதோ cat,
அதோ Fish என்றுதான். அவை குழந்தையின் மனதில் அடையாளங்களோகவே விதைக்கப்படுகின்றன.
ஆனால்,
மனிதனுக்கு அடையாளமிடுகின்றோம் விலங்குகளை விட வித்தியாசமாக. ”அவர் சிங்களவர்”, ”அவர்
தமிழர்”, ”அவர் முஸ்லிம்”, ”அவர் கிறிஸ்தவர்”, நாம் ….” என்றே ஆரம்பக் கல்வி முதலே
மனிதனை நாம் அடையாளப்படுத்துகின்றோம்.
அடுத்தது,
”இது
பௌத்தர்களின் விகாரை”, ”இது கிறிஸ்தவர்களின் தேவாலயம்”, ”இது இஸ்லாமியர்களின் பள்ளிவாயல்”,
”இது இந்துக்களின் கோவில்”, ”இது எமது ……”.
குழந்தை
பக்குவப்பட முன்னரே, அதன் உள்ளங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகப் பிரிக்கப்படுகின்றன.
குரோதங்களின் வேர் விதைக்கப்படுகின்றன. அவன் பதியப்பட்டதை நல்ல முறையில் விதைத்துக்கொண்டால்
யோசிக்க வேண்டியதில்லை. தவறான விதைத்துக்கொண்டால் நிச்சயம் அவனால் நாளை சமூகத்தில்
கேடு வரும். அவன் ஏற்படுத்தாவிட்டாலும் யாரோ ஒருவனால் ஏற்படுத்தப்படும்.
அதன்
விளைவுகளை அணுவணுவாக அனைவரும் காண்பர்.
எமது
பிள்ளைகளுக்கு புத்தகத்தையும் புகைப்படங்களையும் காண்பித்து ஒவ்வொரு மதத்தவரையும்,
ஒவ்வொரு மதஸ்தானங்களையும் காண்பிக்கும் நாம், ஏன் ஒவ்வொரு மதஸ்தானங்களுக்கும் அவர்களை
கூட்டிச் சென்று காண்பிப்பதில்லை?
நாம்
வணங்கும் இடத்தை மாத்திரமே காண வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஒவ்வொரு குழந்தையும் உள்ளாகவில்லை.
மாறாக, தமது பெரியோரால் உள்ளாக்கப்படுகின்றன.
உங்கள்
வழிபாட்டையும், உங்கள் கொண்டாட்டங்களையும் மாத்திரம் உங்கள் சிறிசுகளுக்கு சொல்லிக்
கொடுக்கும் நாம் ஏன் ஏனைய மதத்தவர்களின் வழிபாடுகளையும், கொண்டாட்டங்களையும் சொல்லிக்
கொடுப்பதில்லை. தேவையில்லை, என்றோ ஒரு நாள் அவர்கள் தமது பாடப் புத்தகத்தில் படித்து
விட்டு நடித்துக் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை பலர் மனதில்.
வளரும் பராயத்தில் அடுத்த
விதை
அன்றாடம்
செய்யும் செய்களில் அடுத்தது, விபத்தில்கூட வெறியர்களாக மாறுகின்றோம்.
”விபத்திலே
ஒருவனது உயிர் வீழ்ந்து விட்டது” என்ற செய்தி வருகின்றது. நம்மிடமிருந்து வரும் முதல்
கேள்வி யார் என்பதல்ல. அவன் ”சிங்களமா?” அவன் ”முஸ்லிமா?” அவன் ”தமிழா” என்பதுதான்.
அங்கே
ஒரு கடை பற்றுகின்றது என்ற செய்தியா? எங்களது மனதில் ”அது எம் மதத்தவரின் கட்டிடமா?”
என்ற கேள்விதான் முதலில் வரும். காரணம், எம்மில் விதைக்கப்பட்டுள்ளது மதம் மீதான வெறி.
இவை
அனைத்தையும் எம்முன்னால் இருக்கும் நாளைய தலைமுறையினர் அவதானித்துக்கொண்டுள்ளனர் என்பதை
எம்மில் எவரும் சிந்திப்பதில்லை. இவை எமக்கு பெரிதாய் தெரிவதும் இல்லை.
நாம்
எம் பிஞ்சுகளின் உள்ளத்தில் வேற்றுமையின் வேர்களை நட்டு வைக்கும் சிறு சிறு சம்பவங்களை
அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே செல்லலாம். காகிதங்கள் கடக்கும் வரையில்.
ஆனால்
ஏற்கும் உள்ளங்கள் மிகவும் அறிது. அவ்வாறு ஏற்காத உள்ளங்களினாலேயே நாளை அழிவும் ஏற்படும்.
இனியாவது
பிஞ்சுகளின் உள்ளங்களில் ”அவர் ஒரு மனிதன்” என்ற விதையை விதைப்போம். மதங்களை கடைபிடிப்போம்,
மனதோடு வைத்துக்கொள்வோம் கன்னியமாக.
அதை
நாளை கலவரமாக்காமல் பாதுகாப்போம்.
1000
தேசிய கொடிகள் ஏற்றியும் வேலை இல்லை தேசியத்தின் பொருளை விளங்காதவரை




அழகிய பதிவு. நன்றி
ReplyDeleteIt has happened
ReplyDelete