உன் குழந்தைக்கு அவர் மனிதன் என்று அறிமுகம் செய்
தேசத்தின் சுதந்திர தினத்தை கொண்டாடும் ஆயிரத்தில் ஒருவனாக…. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் தன் இனத்தால் அறிமுகம் செய்யப்படுகின்றன (உ+ம்- ஆடு, மாடு, கோழி, பாம்பு, மீன்), ஆறறிவுள்ள மனித இனத்தைத் தவிற. காரணம் அவனுள் புதைந்துள்ள மதம். மலர்கள் மரணிக்கும், தம் மணத்தின் மகிமையைக் காண்பித்துவிட்டு. மிருகங்கள் மரணிக்கும் தன் இனம் மீதான பற்றைக் காண்பித்துவிட்டு. மரங்கள் மரணிக்கும், மண்ணுடனான தன் இணைப்பைக் காண்பித்துவிட்டு. ஆனால் மனிதன் மரணிக்கின்றான் தன் மதத்தைக் காண்பித்துவிட்டு. சிலர் மரணிக்கின்றனர், தான் ஒரு மத வெறியன் என்பதைக் காண்பித்துவிட்டு. மதத்தை காண்பிப்பது தவறென்று கூறுவதில்லை. மாறாக, தான் மனிதன் என்பதை மறந்துவிட்டு, மதத்தை முன்னிலைப்படுத்துவதையே மடமை என்கிறோம். உலகில் மனிதனைத் தவிர எந்த உயிர்களுக்கு மத்தியிலும் போர் வரவில்லை. வருவதுமில்லை. காரணம் மனிதன் மட்டுமே மதவெறி பிடித்தவன். மதவெறி கொண்டவன் மிருகத்தை விட மோசமானவன். எனவே, மனிதனையே அழிக்க முனைகின்றான். முயற்சியின் முடிவே போராக மாறுகின்றது. நானோ, நீங்களோ மதத்தால் எம்மை அடையாளப்படுத்துவோம் என்றால், ம...