Posts

Showing posts from 2018

அவளுக்காக வாழாத மனைவி

Image
உங்கள் மனைவியின் ஆரம்ப கால இளைமையை நினைவில் கொள்ளுங்கள், அவள் உங்களுக்காக பிரகாசமாகவும், அழகாகவும் உருவாக்கி பாதுகாத்த உடம்பை கொண்டிருந்தாள்.       அவள் தன் உடம்பின் ஒவ்வொரு அங்கத்தையும் அதிக கவனத்துடன் பாதுகாத்து அழகாக வைத்திருந்தாள்.   தனக்காக பல கற்பனைகளை உருவாக்கி வைத்திருந்தாள்... அதில் ஐந்தைக்கூட நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.   அவள் உங்கள் வீட்டை தன் வீடாக நினைத்து கட்டியெழுப்பி உங்களையும் அழகாக கட்டியெழுப்பினாள்.  அவளுக்காகவல்ல... உன் குழந்தைக்கு அவர் மனிதன் என்று அறிமுகம் செய் அவள் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் உங்களுக்காகவும் கர்ப்பம் தரித்தாள்.. அதனால் கற்பனை செய்து பார்க்க முடியாத வேதனைகளைப் பெற்றாள். ஆனாலும் அவளது விருப்பமும் கனவும் வலிமையும் அதுவே. அதை அவள் கண்ணீர் மற்றும் சிரிப்புடன் எதிர்கொண்டாள். பிள்ளையற்ற பெண்கள் படும் வேதனையை பலர் அறிவதில்லை. ஆனால்..., உங்கள் மனைவி கருத்தரிப்பில் படும் வேதனை அதைவிட கொடூரமானது. அதை நீங்கள் முழுமையாக அறிவதில்லை. அவள் உங்கள் குழந்தையைச் சுமந்துகொண்டு இருக்கும...

உன் குழந்தைக்கு அவர் மனிதன் என்று அறிமுகம் செய்

Image
தேசத்தின் சுதந்திர தினத்தை கொண்டாடும் ஆயிரத்தில் ஒருவனாக…. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் தன் இனத்தால் அறிமுகம் செய்யப்படுகின்றன (உ+ம்- ஆடு, மாடு, கோழி, பாம்பு, மீன்), ஆறறிவுள்ள மனித இனத்தைத் தவிற. காரணம் அவனுள் புதைந்துள்ள மதம். மலர்கள் மரணிக்கும், தம் மணத்தின் மகிமையைக் காண்பித்துவிட்டு. மிருகங்கள் மரணிக்கும் தன் இனம் மீதான பற்றைக் காண்பித்துவிட்டு. மரங்கள் மரணிக்கும், மண்ணுடனான தன் இணைப்பைக் காண்பித்துவிட்டு. ஆனால் மனிதன் மரணிக்கின்றான் தன் மதத்தைக் காண்பித்துவிட்டு. சிலர் மரணிக்கின்றனர், தான் ஒரு மத வெறியன் என்பதைக் காண்பித்துவிட்டு.   மதத்தை காண்பிப்பது தவறென்று கூறுவதில்லை. மாறாக, தான் மனிதன் என்பதை மறந்துவிட்டு, மதத்தை முன்னிலைப்படுத்துவதையே மடமை என்கிறோம். உலகில் மனிதனைத் தவிர எந்த உயிர்களுக்கு மத்தியிலும் போர் வரவில்லை. வருவதுமில்லை. காரணம் மனிதன் மட்டுமே மதவெறி பிடித்தவன். மதவெறி கொண்டவன் மிருகத்தை விட மோசமானவன். எனவே, மனிதனையே அழிக்க முனைகின்றான். முயற்சியின் முடிவே போராக மாறுகின்றது. நானோ, நீங்களோ மதத்தால் எம்மை அடையாளப்படுத்துவோம் என்றால், ம...

என்றும் நான் மறவாத சகோதரமொழிப் பாடல்

Image
என் ஊடக உலகில் ஒரு அற்புத நபராக இருந்த சகோதரர் பானு ப்ரசன்னவின் தயாரிப்புக்களில் ஒன்று.  நீங்கள் உயிரோடு இல்லாத போதும் உங்கள் உணர்வுகள் என்னுள்.  Love you Bhanu ayya.  மேலும் பல ஆக்கங்களைப் பார்வையிட

ஏன் விளையாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது?

Image
Photo - ThePapare.com விடுமுறையின் பின்னர் புது வருடத்தில் மீண்டும் பாடசாலைக்குத் திரும்புவது சிறுவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாகவே அமைகின்றது. அந்த நேரம் அவர்களுக்கு பல புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பாக அமைகின்றமையே இதற்கான காரணம். புதிய வருடத்தில் பாடசாலை சென்று பழைய நட்புகளை மீண்டும் சந்தித்தல், புதிய நண்பர்களை உருவாக்குதல், புதிய விடயங்களை செய்தல் மற்றும் புதிய குழு வேலைகள், விளையாட்டுக்கள் என்பவற்றில் ஈடுபடல் போன்ற காரணங்களினால் சிறுவர்கள் புதிய வருடத்தில் பாடசாலைக்கு செல்லும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கின்றனர். சிறுவர்கள், விளையாட்டு மற்றும் புதிய விடயங்களை செய்வதில் மாத்திரம் அதிகம் விருப்பம் கொள்வதில்லை. குறிப்பாக, அவர்கள் ஆச்சரியமான விடயங்களை செய்வதிலும், குழு விளையாட்டுக்களில் ஈடுபடுவதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். இவ்வாறு குழு விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்ததுண்டா? இது சிறுவர்களுக்கு சிறந்த மகிழ்ச்சியையும் உட்சாகத்தையும் வழங்குவது மாத்திரமன்றி, அவர்களின் குழு செயற்பாட்டுத்திறன் மற்றும் சமூகத்துடனான த...

கனவுகள் நிறைந்த வெற்றுக் காகிதம் நீ. முடியும் என்றால் முன்னேறு

Image
கதிரவன் கண் திறக்க முன்னறே கண்விழிக்கின்றான் கனவுகள் நிறைந்த தன் கல்விக்காக கள்ளம், கபடமற்ற அந்த உள்ளத்திற்கு தெறிவதில்லை கடக்க வேண்டிய பாதை கரடு முரடானது என்று காலங்கள் சென்ற பின்பே அவன் அதனை உணர்கின்றான்…. இன்பலோகத்தில் இருக்க வேண்டியவனை இருட்டறைக்குள் அடைக்கின்றது இந்த இரண்டரை வயதுக் கல்வி ஆரம்ப காலத்தில், வைத்தியராகவும் பொருளியலாளராகவும் ஆசைப்பட்ட உள்ளங்கள் ஐந்தாம் தரமாகும்போதே "அப்பாடா…" என்று ஏங்குகின்றன. தாய்மாரின் பரீட்சையை சந்திக்கும் முனைப்பில். இது இளசுகள் இன்பமாய் இருக்க வெண்டிய வயதேயன்றி இளைப்பாறும் வயதில்லை அரவனைப்பை நாடும் கரங்கள் அடுக்கடுக்கான புத்தக சுமைகளுடன் திரிகின்றன… அடுத்த கட்டம் என்ன என்று தெரிந்துகொண்டல்ல…. அம்மாவிடம் அடுத்த வீட்டு மாமி பெறுபேற்றை கேட்கும்  அச்ச த்தில்…. அம்மாவின் பரீட்சை முடிந்த மறுகனமே, அடுத்த சுமை ஆரம்பிக்கின்றது ”ஆறாம் தரத்திற்கு வந்துட்டாய் மகனே... ஆட்டம் போட்ட காலம் முடிந்து விட்டது  அடுத்த கட்டத்திற்கு தயாராக வேண்டும்” என்ற அம்மாவின் அதிரடி அறிவிப்பு அவனுக்குத்தான் தெர...