Posts

Showing posts from 2017

அசிங்கத்தில் அழகு காட்டாதே, அவமானப்படுவாய்

Image
பஸ்ஸில் கண்ட கன்றாவிக்கான பதிவு. மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை வீரர் முஹம்மட் அலியை தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.  அவரது அடிகள் பலமாக இருந்தாலும், அவரது அகம் அழகானது.  அவரது பிள்ளைகள் 9 பேரையும் தெரியாவிட்டாலும் லைலா அலியைத் தெரிந்தவர்கள் அதிகம். கதை இதுதான், கவர்ச்சியான உடையுடன் ஹானா மற்றும் அவளது தங்கை லைலைா இருவரும் தன் தந்தையைப் பார்ப்பதற்கு அவரது வீட்டிற்கு செல்கின்றனர். சென்ற இடத்தில் நடந்தவற்றை ஹானா சொல்கின்றால்….. நானும், தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம் . வழக்கம்போல் தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார் . நாங்கள் உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்ட பின்பு, அவர் எங்களை உற்றுப் பார்த்தார் . எங்களை அருகில் அமர்த்திக்கொண்டு, என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து, ' ஹானா, இந்த உலகில் மிக மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது . வைரங்களை எங்கு...

சிவப்பைக்கூட சித்திரிக்கத் தெரியாத ஒரு சமூகம்

Image
2015.08.17ஆம் திகதி பொதுத் தேர்தல் நாளன்று எடுத்த படம் உள்ளே ஓடுவதும் சிவப்பு, உடுத்திருப்பதும் சிவப்பு. எனவே இவங்க நிச்சயம் சிவப்புக்குத்தான் குடுத்திருப்பாங்க....  சிவப்பு உடுத்தி வாக்களிக்கச் சென்ற எம்மைப் பார்த்து சிரிப்பு வரும் வகையில் சித்தரிக்கப்பட்டு இன்றுடன் இரண்டு வருடங்களாகின்றன. சில விட ய ங்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய சமூகம் சிரிப்புக்காட்டுகின்றது.  ஒரே நேரத்தில் கதைத்து, ஒரே முறையில் உடுத்து வரு வதும் ஒரு கெத்துதான். 

உன்னதமான மூவரை இழந்து நிற்கும் ஒரு ஊர்

Image
அன்று அனஸ் ஹாஜி பின்னர் ஸவாஹிர் மௌலவி  இன்று அஸ்லம் நானா..... சிலரது இழப்புகள் என்றும் மறக்க முடியாத இழப்புகளாக அமையும் இவர்கள் மூவரது இழப்புகளைப் போன்று. இவர்களும் சாதாரண மனிதர்கள்தான். எனினும் உலக மனிதர்களின் மனங்களை வென்ற சங்கையான மனிதர்கள்.  இறுதியாக எம்மை விட்டுப் போனவர் சகோதரர் அஸ்லம். இவரைப் பற்றி அதிகம் விபரிக்கத் தேவையில்லை. அனைவரும் அறிந்த அற்புதமான மனிதர். அவரது உடல் இன்னும் சில நேரமே எம்மோடு இருக்கும். அந்த சில நிமிடங்களே அவரை நினைத்து அவரது அன்பானவர்கள் அழுவார்கள், அதன் பின்னர் அவரது உறவினர்கள் அழுவார்கள். இறுதியில் ஆங்காங்கே அவர் குறித்து கதைப்பார்கள், சில சம்பவங்களை நினைப்பார்கள். எனினும், இவர்கள் எமக்காக விட்டுச் சென்ற பாடங்கள் பல, அவற்றில் இருந்து கற்க வேண்டியவை பல, எம்மில் வர வேண்டிய மாற்றங்கள் இன்னும் பல....  சில விடயங்களை வெளிப்படையாகக் கூறுகின்றேன் யாரையும் புன்படுத்தவல்ல, புது மனிதராக மாற...  பிரதேச வாதத்தில் முன்னிலை வகிக்கும் எமது ஊர் மக்களுக்கு (முட்களுக்கு) மத்தியில் இவர்கள் வாழ்ந்து காட்டினார்கள் எந்தவித வேற...