அசிங்கத்தில் அழகு காட்டாதே, அவமானப்படுவாய்
பஸ்ஸில்
கண்ட கன்றாவிக்கான பதிவு.
மறைந்த
அமெரிக்க குத்துச் சண்டை வீரர் முஹம்மட் அலியை தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அவரது
அடிகள் பலமாக இருந்தாலும், அவரது அகம் அழகானது.
அவரது
பிள்ளைகள் 9 பேரையும் தெரியாவிட்டாலும் லைலா அலியைத் தெரிந்தவர்கள் அதிகம்.
கதை
இதுதான்,
கவர்ச்சியான
உடையுடன் ஹானா மற்றும் அவளது தங்கை லைலைா இருவரும் தன் தந்தையைப் பார்ப்பதற்கு அவரது வீட்டிற்கு செல்கின்றனர். சென்ற இடத்தில் நடந்தவற்றை
ஹானா சொல்கின்றால்…..
நானும்,
தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம். வழக்கம்போல் தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார்.
நாங்கள்
உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்ட
பின்பு, அவர் எங்களை உற்றுப்
பார்த்தார். எங்களை அருகில் அமர்த்திக்கொண்டு, என் கண்களை நோக்கி
நேராகப் பார்த்து,
'ஹானா,
இந்த உலகில் மிக மதிப்பு மிக்கதாக
இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது.
வைரங்களை
எங்கு எடுப்பாய்?
பூமியின்
ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன.
முத்துக்களை
எங்கு எடுப்பாய்?
கடலின்
ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்கள் உள்ளன.
தங்கத்தை
எங்கு எடுப்பாய்?
சுரங்கத்தினுள்ளே,
அடுக்கடுக்கான பாறைகளுக்குள்ளே மறைக்கப்பட்ட நிலையில், அதை எடுப்பத்தற்கு நீ
மிகக் கடினமாக உழைக்க வேண்டும். '
என்னை
உற்று நோக்கியவராக,
'உன்னுடைய
உடல் புனிதமானது. வைரங்கள், முத்துக்களை விட நீ புனிதமானவள்.
உன் உடலை முறையாக நீ
மறைத்துக்கொள்ள வேண்டும்' என்றார்.
இது
ஹானாவின் அனுபவப் பகிர்வு. இது சிலரது உணர்வுகளுக்கு உளைச்சலை ஏற்படுத்தும் பதிவாகவும்
அமையும். இதைப் படித்தால் சிலர் ”முட்டாள் தனம்” என்று மௌனமாகச் சிரிப்பார்கள்.
பெண்களின்
உடலமைப்பு என்பது இறைவன் தந்த பொக்கிஷம். பொக்கிஷங்களை பொத்திப் பாதுகாப்பதே அறிவார்ந்தவர் செயல். அதைவிடுத்து, பொக்கிஷம் உள்ள வீட்டை திறந்து
போட்டால் பொறுக்கிகளால்
உங்கள் பொக்கிஷம் சூறையாடத்தான்படும்.
பொக்கிஷமாய் போற்றி வளர்த்த தாய், தந்தைக்கு அழகு என்ற போர்வையில் அசிங்கத்தை பரிசளிக்காதீர்கள். நாகரீகம் என்ற போர்வையில் நாய்களுக்கு எலும்புத்துண்டு போடாதீர்கள்...!
பெண்களே,
உங்களை உரசினால்தான் உணர்ச்சி வரும். ஆண்களுக்கு அசிங்கத்தைப் பார்த்தாலே உணர்ச்சி
வரும். அவதானமாக உடை அணியுங்கள். அசிங்கத்தைக் காண்பித்துவிட்டு ”அவன் என்னை அசிங்கப்படுத்தினான்”
என்று அங்கலாய்க்க வேண்டாம்.
உங்களுக்கு
பல கேள்விகள் எழலாம். ”ஏண்டா உன் சகோதரிக்கு நடந்தால் இப்படி பேசுவியா?, உன் தங்கையை
அவமானப்படுத்தினால் உனக்கு எப்பிடி இருக்கும்?” என்றெல்லாம் அடுக்குவீர்கள்.
நிச்சயமாக,
என் தங்கை அடுத்தவனுக்கு அரைநிர்வாணத்தைக் காண்பித்து விட்டு அவள் அவனால் அவமானப்பட்டால்
அந்த அவமானத்திற்கு அண்ணன் நானும் பங்காளி. ஆண்மையுள்ள அண்ணன்மார் தங்கையை அரை நிர்வாணமாக அனுப்ப மாட்டான். அதை அனுமதிக்கவும் மாட்டான்.
படுக்கையில்
இருந்து எழுந்து, மறதியில் வந்த விதத்திலேயே சிலர் பஸ் வண்டியிலும், பாதைகளிலும் இருப்பர். பார்ப்பதற்கு பரவசம் என்று படுக்கையில் காண்பிக்க வேண்டியதை பாதையில்
காண்பித்தால் பாலகனும் பார்க்கத்தான் செய்வான். பார்ப்பதற்கே காண்பிக்கும் சிலருக்கு
பதில் இல்லை. பாவம் அவர்கள்.
அண்ணன்மாறே,
அழகான சகோதரிகளின் அரைவாசியைக் காண்பித்து அவர்களை அசிங்கப்படுத்த அனுமதிக்க வேண்டாம்.
அப்பன்மாறே,
அழகாய் பெற்றெடுத்த பெண் குழந்தையை பொறுக்கிகளுக்கு பொறியாய் கொடுக்க வேண்டாம்.
அசிங்கமான
அழகு நாளை எங்களை அவமானப்படுத்தும் என்பதை மறக்காமல் இருப்போம்.

Super brother
ReplyDelete