உன்னதமான மூவரை இழந்து நிற்கும் ஒரு ஊர்


அன்று அனஸ் ஹாஜி
பின்னர் ஸவாஹிர் மௌலவி 
இன்று அஸ்லம் நானா.....

சிலரது இழப்புகள் என்றும் மறக்க முடியாத இழப்புகளாக அமையும் இவர்கள் மூவரது இழப்புகளைப் போன்று.

இவர்களும் சாதாரண மனிதர்கள்தான். எனினும் உலக மனிதர்களின் மனங்களை வென்ற சங்கையான மனிதர்கள். 

இறுதியாக எம்மை விட்டுப் போனவர் சகோதரர் அஸ்லம். இவரைப் பற்றி அதிகம் விபரிக்கத் தேவையில்லை. அனைவரும் அறிந்த அற்புதமான மனிதர். அவரது உடல் இன்னும் சில நேரமே எம்மோடு இருக்கும். அந்த சில நிமிடங்களே அவரை நினைத்து அவரது அன்பானவர்கள் அழுவார்கள், அதன் பின்னர் அவரது உறவினர்கள் அழுவார்கள். இறுதியில் ஆங்காங்கே அவர் குறித்து கதைப்பார்கள், சில சம்பவங்களை நினைப்பார்கள்.

எனினும், இவர்கள் எமக்காக விட்டுச் சென்ற பாடங்கள் பல, அவற்றில் இருந்து கற்க வேண்டியவை பல, எம்மில் வர வேண்டிய மாற்றங்கள் இன்னும் பல.... 

சில விடயங்களை வெளிப்படையாகக் கூறுகின்றேன் யாரையும் புன்படுத்தவல்ல, புது மனிதராக மாற... 

பிரதேச வாதத்தில் முன்னிலை வகிக்கும் எமது ஊர் மக்களுக்கு (முட்களுக்கு) மத்தியில் இவர்கள் வாழ்ந்து காட்டினார்கள் எந்தவித வேற்றுமையும் இன்றி. 

தமது இயக்கங்களுக்காக அடுத்தவன் இதயத்தை கடிக்கலாம் என்றால் அதையும் செய்யும் ஆற்றல் கொண்ட எம் மத்தியில், இயக்கம் எல்லாம் வெறுமனே ஒரு வெளிப்பார்வைக்கே என்பதை தமது வாழ்க்கையின் மூலம் காண்பித்தார்கள் இந்த உயர்ந்த இதயம் கொண்ட மூவரும்.

அரசியல் மூலம் தனது அண்ணன் தம்பியை வளர்த்து விட நினைக்கும் அழுக்கான அரசியல்வாதிகளுக்கு மத்தியில், அரசியல்வாதி என்றால் தன் பணத்தை மக்களுக்காகவும், தான் வளர்ந்த மண்ணுக்காகவும் இப்படித்தான் செலவிட வேண்டும் என்பதை அரைத் தசாப்தத்திற்குள் செய்து காட்டினார் அஸ்லம் நானா.... 

அனைத்திற்கும் மேலாக பணத்தையும், புகழையும் வைத்து படம் காட்டும் பலருக்கு மத்தியில், தாம் தேடிய பணத்திற்கும் புகழுக்கும் மேலாக அதிகமாக மனித மனங்களை சம்பாதித்தனர் இந்த மூவரும். 

இதுவே இவர்களது சிறப்பு.

அவர்கள் போய் விட்டார்கள். நாம் போக இருக்கின்றோம்.

இன்னும் ஒரு அனஸ் ஹாஜி, இன்னும் ஒரு ஸவாஹிர் மௌலவி, இன்னும் ஒரு அஸ்லம் நானா என்று கதையில் கவிதை பாடாமல் உள்ளங்களுக்கு இடையில் ஒன்றிணைவோம், உணர்வுகளை மாற்றுவோம், உண்மை உருவத்தை உலகுக்கு காட்டுவோம். பின்னர் ஊர் தானாக உருவாகும்...

இறைவா இவர்களது பாவங்களை மன்னித்து, இவர்களது சேவைகளை் ஏற்றுக்கொள்வாயாக!! 

இதை பேஸ் புக்கிலே பகிர ஒரு ஆசை. Shares அள்ளி வரும் என்று நினைக்கின்றேன்

Comments

Popular posts from this blog

அவளுக்காக வாழாத மனைவி

சிவப்பைக்கூட சித்திரிக்கத் தெரியாத ஒரு சமூகம்