கனவுகள் நிறைந்த வெற்றுக் காகிதம் நீ. முடியும் என்றால் முன்னேறு

கதிரவன் கண் திறக்க முன்னறே கண்விழிக்கின்றான்
கனவுகள் நிறைந்த தன் கல்விக்காக
கள்ளம், கபடமற்ற அந்த உள்ளத்திற்கு தெறிவதில்லை
கடக்க வேண்டிய பாதை கரடு முரடானது என்று
காலங்கள் சென்ற பின்பே அவன் அதனை உணர்கின்றான்….

இன்பலோகத்தில் இருக்க வேண்டியவனை
இருட்டறைக்குள் அடைக்கின்றது
இந்த இரண்டரை வயதுக் கல்வி

ஆரம்ப காலத்தில்,
வைத்தியராகவும் பொருளியலாளராகவும் ஆசைப்பட்ட உள்ளங்கள்
ஐந்தாம் தரமாகும்போதே "அப்பாடா…" என்று ஏங்குகின்றன.
தாய்மாரின் பரீட்சையை சந்திக்கும் முனைப்பில்.
இது இளசுகள் இன்பமாய் இருக்க வெண்டிய வயதேயன்றி
இளைப்பாறும் வயதில்லை

அரவனைப்பை நாடும் கரங்கள்
அடுக்கடுக்கான புத்தக சுமைகளுடன் திரிகின்றன…
அடுத்த கட்டம் என்ன என்று தெரிந்துகொண்டல்ல….
அம்மாவிடம் அடுத்த வீட்டு மாமி பெறுபேற்றை கேட்கும் அச்சத்தில்….

அம்மாவின் பரீட்சை முடிந்த மறுகனமே,
அடுத்த சுமை ஆரம்பிக்கின்றது
”ஆறாம் தரத்திற்கு வந்துட்டாய் மகனே...
ஆட்டம் போட்ட காலம் முடிந்து விட்டது 
அடுத்த கட்டத்திற்கு தயாராக வேண்டும்” என்ற
அம்மாவின் அதிரடி அறிவிப்பு
அவனுக்குத்தான் தெரியும், நான் ஆட்டத்தை ஆரம்பிக்கவே இல்லை என்று….

சாதாரண தரம்வரை சாகடித்த சொந்தங்கள்
சற்றுக்கூட சாதாரண மனிதனாய் வழ விடுவதில்லை
சாதிக்க வேண்டும் என்று 
சாகும்வரை சத்தமிட்டுக்கொண்டே இருக்கும்….

அனைத்தையும் கடந்த நீ
சமூகத்திற்காய் காலடி எடுத்து வைப்பாய்
அப்பொழுதாவது அரவனைப்பு கிடைக்குமா…?
இல்லவே இல்லை….
ஆத்திரமும், அழுகையுமே அதிகரிக்கும்
அன்று உணர்ந்ததை விட அதிகமாய்.

ஊரை நீ உயர்த்த நினைத்தாலும்
ஊரான் உன்னை உழைக்க விடமாட்டான்
உயர்ந்த ஒருவனாய் நீ இருந்தால்கூட….
உள்ளதைச் சொன்னால் ஒழித்திடுவார்கள்
உள்ள இடம் தெரியாமல் உன்னை.

ஊரைக் காக்கும் ஒருவனாய் இருப்பதை விட
உள்ளதைக் காக்கும் ஒருவனாய் இருப்பது நன்று என்பதை
ஒரு நாள் உணர்வாய் ஊருக்காய் வேளை செய்தால்….

உரக்கச் சொல்கின்றேன் உன்னைப் பார்த்து
உனக்காய் வாழ்த்திடு உயிர்போகும் வரை
உழைத்து வாழவை உடன் இருந்தவர்களையும். 

அனைத்தையும் தாண்டி நீ சமூகத்திற்காய் உழைக்க வேண்டுமா?
அதிகமானவற்றை இழக்கத் தயாராக இறங்கு
நிச்சயம் நீ வெற்றி பெறுவாய்  
எதிரே எவன் வந்தாலும் நிற்க மாட்டாய். 
உன் இலக்கை அடையும்வரை

(புது வருடத்தில் புதிய நாளில் பாடசாலைக்குள் நுழையும் உயிர்களுக்கு)

Comments

Popular posts from this blog

அவளுக்காக வாழாத மனைவி

சிவப்பைக்கூட சித்திரிக்கத் தெரியாத ஒரு சமூகம்

உன்னதமான மூவரை இழந்து நிற்கும் ஒரு ஊர்